டிராபிக் ராமசாமி
பிறப்பு : ஏப்ரல்1, 1934
பிறந்த ஊர் : செய்யாறு, தமிழ்நாடு.
பணி : ஓய்வு பெற்ற துணி நூல் ஆலை மேற்பார்வையாளர்.
பெற்றோர் : ரெங்கசாமி, சீத்தாம்மாள்.
இவர் ஒரு புகழ்பெற்ற சமுக ஆர்வலர். பொது மக்களுக்காக தொடந்து பல போராட்ட க்களம் கண்டுள்ளார். தற்பொழுதும் போராடிக் கொண்டிருக்கிறார். சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகந்து போக்குவரத்தை சரி செய்வது இவருடைய வழக்கம். இதன் காரணத்தால் தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பட்டம் வந்தது. இவர் ஏராளமான பொதுநலவழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்.
இவரது முறையான கல்வி பன்னிரெண்டாம் வகுப்புடன் முடிந்தது. பின்னர் பிரிட்டிஷ் இன்ஸ்ட்டிட்யூட், மும்பை கல்வி நிறுவனத்தில் அஞ்சல்வழி மூலம் துணித்துறையில் AMIE பட்டம் பெற்றார். ஊர்க்காவல் படையிலும் முன்பு பணியாற்றியுள்ளார். தன்னுடைய பதினான்காம் வயதில் இருந்து போரட்ட கலத்தில் இருக்கின்றார். எதிரே யார் வந்தாலும் தயங்காமல் கேள்வி கேட்பார்.
நூற்றுக்கானக்கான பொது நல வழக்குகலை நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.
2002-ஆம் ஆண்டு சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவர்தான். சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அமல் செய்யப்படுகிறது.
அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் ராமசாமி. தமிழக சமூக ஆர்வலர்களின் முன்னோடி என்று போற்றப்படுபவரும் இவர் தான் . ஏதோ ஒரு சில விஷயங்களில் நாம் நிம்மதியாக வழ்கின்றோம் எனில் அதில் இவருடைய பக்கும் நிச்சயம் உண்டு. சுய நலமாக பலர் வாழும் இச்சமுத்தில் சுயநலமில்லாமல் போதுநலமாக வாழ்ந்து பொது மக்களுக்காக பல போரட்டங்களை செய்தார். மது பாட்டல் தடை செய்யும் விவகாரத்தில் செல்போன் டவர் மீது ஏறி பல குடும்பங்களில் வாழ்விற்காக போரடினார்.
ஏரி, குளங்களை காப்பாற்ற வெயில், மழை என்று நினைக்காமல் தன்னூடைய வாழ்க்கை முழுவதும் பொதுமக்களிக்காக அர்பணித்தார். ஆனல் இச்சமுகத்தில் பலர் அதனை புரிந்து கொள்ளாமல் யாரே ஒருவர் யாருக்காகவோ போரட்டம் செய்கின்றர் என்று நினைக்கின்றார்கள் இச்சமுகத்தினர், ஆனால் ஆவர்கள் நமக்காகவும், நம்முடைய அடுத்த தலை முறைக்காகவும் தான் தொடர்ந்து பல போரட்டங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் புறிந்து கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment