அதிகாரம்
மனிதன்
எவனுக்கும் உள் இருக்கும் ஓர் ஆசை நாம் நம்மைச்சுற்றியுள்ள அனைவரையும் ஆளவேண்டும்.
அடிமைப்படுத்தி தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். குழந்தையாய் இருக்கும்
போது அன்பால் நம் தாய், தந்தையையும் சிறுவனான உடன் தனது திறமையால் விளையாட்டின் வாயிலாக
ஆள நினைப்பார்கள், பள்ளிக்கு சென்றவுடன் அச்சிறுவனின் மனதில் நம்மைச்சுற்றியுள்ள சமூகம்
எப்போழுதும் நம்மை மதிக்க வேண்டும் நம்மைப்புகழவேண்டும் என்ற எண்ணத்திற்கு அவன் தள்ளப்படுகிறான் .
தன்னம்பிக்கை செறிந்த, திமிர் சற்று அதிகமாக இருப்பவன்,
பொருமை என்பதே அறியாதவன் பிறரை துன்புறுத்துவதை மட்டுமே பிரதான கொள்கையாக வைத்துள்ளவன்
அதில் பிறரை சந்தோஷப்படுத்த நினைப்பவன் எதையும் தனியாகவே செய்து முடிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளவன் தன்னை நேசிப்பவரையும் மட்டும் அதிகம்
வெறுப்பவன், தன்னை ஒதுக்குபவரை வெற்றி கொள்ள துடிப்பவன். வெற்றி கண்ட பிறகு யாரையும் அடிமைப்படுத்தாமல்
அந்த வெற்றியையும், அவர்களையும் அங்கேயே விட்டுச் செவ்பவன்.
அதனால் அவனை நேசிப்பவர்கள் மிக அதிகம் எதிர்பார்ப்பவர்கள்
அதிகம். அவணிடமிருந்து தீய செயல்களை மட்டும் பெண்களை அதிகம் விரும்பாதவன் ஆனால் மதிப்பவன்.வெகுண்டெழுந்த
பலபேர் நிலைகள் வெகுவிரைவில் அழிந்து போகும் நிலை
உருவாக காரணம் அவர்கள் தங்கள் அதிகாரத்தின் பயன்களும், பலங்களும் மக்களுக்கு
பயன்படுபவை என்பதை மறந்து தங்கள் இலாபத்திற்காகவும், சுயநலமான இன்பாங்களுக்காகவும்
செயல்படுவதால் ஏற்ப்படுவதாகும். அதிகாரத்தை அனைவரும் அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்துகின்றனர்.
சிலர் அவர்கள் விருப்பமாணவர்களிடம், வெகு சிலர் எதிரிகளிடம் எதிரிகளாக பாவித்து அதிகாரத்தை
பயன்படுத்துகின்றனர். அதிகாரம் தலைவர்களுக்கு கொடுக்கப்படுகிற ஒரு கைத்தடிபோல அதை செலுத்த
முற்பட வேண்டுமே தவிர அந்தக்கைத்தடியை அவர்கள் மீதே உபயோகிக்க்கூடாது.
ஆட்சியில்
இருப்பவர்கள் எப்பொழுது தன் அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என யோசிக்காமல். தன் அதிகாரத்தால்
என்ன பயன் நிகழும் என யோசிப்பது சாலச்சிறந்தது. குழந்தைகளின் அதிகாரம் வீட்டிலும்,
மாணவர்களின் அதிகாரம் பள்ளி, கல்லூரிகளிலும், ஆண்கள், பெண்கள் அதிகாரம் அவர்கள் வேலை
செய்யும் இடங்களை பொறுத்து அமைகிறது. ஆக அதிகாரம் அவரவர் சூழ்நிலைகளைப் பொருத்தே அமைகிறது.
Comments
Post a Comment