பெண் ஏன் அடிமையானள் ?
புத்தக மதிப்பிடு
ஆசிரியர் – தந்தை பெரியார்
முதல் பதிப்பு – 1992
22 ஆம்பதிப்பு – ஜனவரி 2004
அச்சிட்டோர் – விடுதலை ஆஃப்செட் பிரிண்டர்ஸ்.
விலை - 25 ரூபாய்.
பக்கம் – 79.
பெண் ஏன் அடிமையானாள் ?” என்னும் இப்புத்தகம் மொத்தம் பத்து அத்தியாயங்களை கொண்டுள்ளது.இதில் முதல் அத்தியாயமான “கற்பு”. கற்பு என்பது, ஆண்-பெண் இருவருக்கும் சரிசமமானது. இதில் கற்பு என்பது இருவருக்கும் ஒன்று என்ற நீதி ஏற்பட வேண்டும் என்பதை வலியுறித்தியுள்ளார்.
மூன்றாவது அத்தியாயம் “காதல்” இதில் காதல் என்பது ஒரு தெய்விகமானது,அது என்றும் மாற்றப்பட முடியாத்தென்றும்,காதலென்ற ஒரு வார்த்தையை சொல்லி, அதில் ஏதோ ஒரு தனிச்சிறப்புண்டு என்று மக்களிடம் புகுத்துவிடப்படுகின்றது. இக்காலத்தில் காதல் என்பது ஒரு ஆனுக்கும், ஒரு பெண்னுக்குமான உறவு. அது மற்றவர்கள் மீது வரக்கூடது.மீறி வந்தால் கூறுகின்றனர்.ஆனல் காதல் என்பது ஒரு ஆசை அது ஏற்பட்டு மறைந்து போகக்கூடியது. என்று பல எடுத்துக்காட்டுகளுடன் எழுதியுள்ளார்.
நான்காவது அத்தியாயம் “கல்யான விடுதலை” அதாவது கல்யாணம் என்பது ஆண்-பெண் இருவருக்குமான ஒரு ஒப்பந்த விழாவாகும், அதில் எவ்வித தெய்விக தன்மையும் இல்லை. இருவருக்கும் புரிதல் இல்லாவிட்டால் செல்லக்கூடியது என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளார்.
ஐந்தாவது அத்தியாயத்தில் “மறுமணம் தவறல்ல”.ஒருமுறை திருமணம் செய்து கொண்ட பின் இருவரும் உயிருடன் இருக்கும் பொழுது எவ்வாறு மறுமணம் செய்து கொள்வது, அப்படி செய்தால் மற்ற ஒருவர் எவ்வாறு இருக்க முடியும் என்ற எண்ணத்தை கைவிட்டு, இருவரும் மறுமணமுறையை கைக்கொண்டால் யாருக்கும் கஷ்டம் ஏற்படாது என்பதை வலியுறுத்தி இந்த அத்தியாயத்தை எழுதியுள்ளார்.
ஆறவது அத்தியாயத்தில் “விபச்சாரம்” ,இதில் விபச்சாரம் என்பது என்றும் பெண்னிற்கே உறியதாயிருக்கின்றது. அது உலக வழக்கில் எந்த ஒரு ஆனுக்கம் சம்மந்தப்படுவதில்லை என்றும், அதனால் பெண்களுக்கும் மட்டும் தான் கஷ்டம், நஷ்டம், வியாதி, வாழ்க்கையின்மை முதலிய துன்பங்கள் ஏற்படுகின்றது என்றும். ஆனால் இவை இருபாலருக்கும் சம்மானது என்று வலியுறித்தியுள்ளார்.
ஏழவது அத்தியாயம் “விதவைகள் நிலைமை”. பெண்கள் விதவை தன்மையால் அனுபவிக்கும் கொடுமைகளை எடுத்துக்காட்டியும், கனவன் இழந்தவுடன் அவர்கள் படும் துன்பங்களையும், கனவன் இறந்தவுடன் மறுமணம் செய்தல் தவரில்லை, அவை மிக அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
எட்டாவது அத்தியாயத்தில் “சொத்துரிமை” பெண்களுக்கும், ஆண்களைப்போல சமுதாயத்தில் சமமாக மதிக்கப்பட வேண்டும். அவர்கள் ஆண்களுக்கு அடிமைகளாக அள்ளாமல்,பெற்றோர்களுடைய சொத்துக்களில் ஆண்களைப்போல பெண்களுக்கும் சமமாக பங்கீட்டு தர வேண்டும் என்பதை வலியுறித்தி எழுதியுள்ளார்.
ஒன்பது மற்றும் பத்தாவது அத்தியாயத்தில் “கர்பத்தடை” மற்றும் “பெண்கள் விடுதலைக்கு ஆண்மை” அழிய வேண்டும். பெண்கள் விடுதலைக்கு அவர்கள் ஒன்றினைந்து பாடுபட வேண்டும். பெண்கள் தங்களை ஆண்களுக்கு அடிமைகளாக இருக்கத்தான் படைத்தார்கள் என்பதை அடியோடு விட்டுவிட வேண்டும்.இருவரும் சரிசமம் என்பதை சமூதாயத்திற்க்கு உணர்த்த வேண்டும். என்ற உயரிய கருத்துக்களை வலியுறித்தி இப்புத்தகத்தினை எழுதியுள்ளார்.
Comments
Post a Comment